அஜித் மற்றும் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஸ்ருதி!

0
37

நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகருடன் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 ஆகிய படங்களில் வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இதனடிப்படையில் மகேஷ் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் தற்போது இப்படப்பிடிப்புக்கான ஆரம்ப வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here