அமெரிக்கா – தென்கொரியா இணைந்து ஏப்ரல் மாதம் இராணுவப் பயிற்சி!

0
49

அமெரிக்கா – தென்கொரியா இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் சொய் ஹன் சோ இன்று செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவில் இந்த ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், போட்டிகளை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கும், கூட்டு இராணுவப் பயிற்சிகளை தாமதமாக நடத்துவதற்கும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியை ஏப்ரல் 01ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இராணுவப் பயிற்சிகளில் 17ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினரும் 3 இலட்சம் தென்கொரிய படையினரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சந்திப்பொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here