அமைச்சர் சம்பிக்க ரணவக்க முல்லைத்தீவு  விஜயம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
234

 கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில்  பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட  அமைச்சர் சம்பிக்க ரணவக்க மக்களுடன் கலந்துரையாடலை  மேற்கொண்டுள்ளார்

அத்துடன் முல்லைத்தீவு விஸ்வமடு பாரதி  வித்தியாலய மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் அமைச்சருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன்   அமைச்சின் அதிகாரிகள் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்தும் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான கற்றல் உபகரணங்கள் வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளித்து சென்றுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here