அரையிறுதியில் பரிஸ் ஸா ஜெர்மைன்

0
136

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கூப் டி பிரான்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் அணி தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் மர்ஸெய் அணியை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் அணி தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் முதற்பாதி கோலெதுவும் பெறப்படாமல் முடிவடையப் போகின்றதோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில் சக வீரர் ஜூலியான் ட்ரெக்ஸரிடமிருந்து பெற்ற பந்தை கோலாக்கிய பரிஸ் ஸா ஜெர்மைனின் அஞ்சல் டி மரியா தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே இன்னொரு சக வீரரான யூரி பெர்சிச்சியிடமிருந்து பெற்ற பந்தை கோலாக்கிய அஞ்சல் டி மரியா, பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். பின்னர், ஜூலியான் ட்ரெக்ஸ்லரிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் எடின்சன் கவானி கோலாக்க அவ்வணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மர்ஸெய்யுடனான லீக் 1 போட்டியில் காயமடைந்த பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்கள வீரர் நேமருக்கு பிரேஸிலில் இவ்வாரயிறுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here