ஆபத்தின் விளிம்பில் வட்டுவாகல் பாலம்!

0
158

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் காணப்படும் வட்டுவாகல் பாலமானது மிகவும் சேதமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் காணப்படுகிறது.

மிகவும் மக்கள் நடமாட்டம் உள்ள வீதியாக காணப்படும் இந்த வீதியில் குறித்த பாலமானது திருத்தப்பட வேண்டும் எனபல தரப்பினராலும் பல தடவைகள்  கோரப்பட்டபோதும் குறித்த பாலத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீடு தேவை எனவும் நிதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து திருத்தப்படாது காணப்படுகிறது

பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாளிரன்கியும் காணப்படுகிறது

தற்போது குறித்த நீரேரியில் அதிக நீர் நிரம்பி காணப்படும் நிலையில் தற்காலிகமாகவேனும் வீதியில் திருத்தங்கள் மேற்கொண்டு உதவ மக்கள் கோரும் அதேவேளை குறித்த பாலத்தினூடாக அவதானமாக போக்குவரத்து செய்யுமாறும் கோருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here