இந்தியா அணியுடன் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இலங்கை!

0
173

இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய 4 ஆவது முத்தொடர் போட்டியில் இலங்கை அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் இலங்கை நாட்டின் சுதந்திர கிண்ண முத்தொடர் போட்டிகள் கடந்த 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் 3 அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று 4 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ளன. இன்று ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

இதனால் களமிறங்கிய இலங்கை அணி மழை காரணமாக போட்டி 19 ஓவர்களாக மட்டுபடுத்தப்பட்டதால் 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கiளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வெற்;றி பெற்றுள்ளது. போட்டியில் இந்தியா அணி சார்பில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்தியா அணி வீரர் ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here