இந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மீட்பு!

0
436

இந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மீட்பு!
இந்தியா ராமேஸ்வரம் நேற்று 25.06..2018. தங்கச்சிமடத்தில் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்திய ஆயதங்கள் கண்டுபிடிப்பையடுத்து தங்கச்சிமடம் கிராமம் பரபரப்பு.

இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்,தங்கச்சிமடம்,தண்ணீர் ஊற்று,பனைக்குளம்,ஆற்றாங்கரை உள்ளிட்ட 14 இடங்களில் இந்தியாவின் ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.

இதனைதொடர்ந்து, கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கையை சோந்த தமிழ் குழுக்கள் அனைத்து வெளியேற்றப்பட்டது. அந்த கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா மற்றும் பிரப்பன் வலசை பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதி நவின துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் பகுதியில் உள்ள மீனவர் எடிசன் என்பவர் வீட்டியில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது சுமார் 4 அடி அளத்தில் பெட்டிகள் இருப்பதை கண்டவுடன் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை கண்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற ராமேஸ்வரம் பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் சென்ற பொலிஸார் மற்றும் வெடி குண்டுகளை செயல் இழக்கும் பிரிவினரும் கனரக இயந்திரம் கொண்டு அகழ்வு பணிகளை மேறகொண்டார்கள்.
இதில் ஏ.கே 50 துப்பாகிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி தோட்டாக்கள் 4 பெட்டிகளிலும் ஏ.கே 47 துப்பாகிக்கு பயன்படுத்தும் தோட்டங்கள் 22 பெட்டிகளிலும் கண்டு எடுக்கபட்டதுடன் எஸ்.எல். ஆர் துப்பாகிக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் 2250 மற்றும் கை குண்டுகள் யெலட்டின் வெடிகள் வெடிக்க பயன்படுத்துப்படும் இரும்பு பெட்டிக்ள 200க்கு மேலும் மற்றும் வயர்கள் கண்டு எடுக்கபட்டுள்ளது.

இதனையடுத்து ஓம் பிரகாஷ் மீனா மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவிக்கும் போது விடுதலைபுலிகள் பயன்படுத்தியது என்றும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் புதைக்கபட்டது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here