இரண்டு உயிரை குடித்த கோவில் பிரசாதம்- மேட்டுப்பாளையத்தில் விபரீதம்!

0
37

இந்திய கோவையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் பொறிச்சாட்டு திருவிழா கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கபட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது,இதை பக்தர்கள் பலர் வாங்கி உண்டனர் அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி,மயக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரு குழந்தைகள் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி லோகநாயகி மற்றும் சாவித்ரி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கெட்டுப்போன நெய், எண்ணெய் ஆகியவற்றை பிரசாதம் செய்யப் பயன்படுத்தியதால் அது உணவில் விஷமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்த பட்ட நெய்யில் பிரசாதம் சமைக்கப்பட்டதாகவும் அதனால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது எனவும் சொல்லப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here