இறுதிப் போட்டியில் ஜுவென்டஸ், ஏ.சி மிலன்

0
168

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு, ஜுவென்டஸும் ஏ.சி மிலனும் தகுதிபெற்றுள்ளன.

கோப்பா இத்தாலியா தொடரின் நடப்புச் சம்பியனான ஜுவென்டஸ் தனது அரையிறுதிப் போட்டியில் அட்டலாண்டாவை வென்றும் ஏ.சி மிலன் தனது அரையிறுதிப் போட்டியில் லேஸியோவை வென்றுமே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

அட்டலாண்டாவில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 1-0 என்ற மொத்த கோல் கணக்கில் முன்னிலையிலிருந்த ஜுவென்டஸ், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2-0 என்ற மொத்த கோல் கணக்கில் தொடர்ந்து நான்காவது பருவகாலமாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

குறித்த போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமலிருக்கும்போது ஜுவென்டஸ் அணியின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் பெனால்டி பகுதிக்கு வெளியாலிருக்கும்போது அட்லாண்டாவின் அலெஜான்ட்றோ கோமிஸ் 40 அடி தூரத்திலிருந்த உதைந்த உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், போட்டியிnன்ன் 74ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸின் பிளெய்ஸி மத்தியூடி பின்னாலிருந்து அட்டலாண்டின் ஜல்லூகா மஞ்சினியால் தொடுக்கைக்குள்ளாக்கப்பட சர்ச்சைக்குரிய விதத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை மிரலெம் பிஜானிக் கோலாக்கியதே ஜுவென்டஸால் பெறப்பட்ட கோலாகும்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்த ஏ.சி மிலன், லேஸியோவின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியையும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்தது. இதனைத் தொடர்ந்ததான மேலதிக நேரத்திலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்மானமிக்க உதையை லேஸியோவின் லூயிஸ் பிலிப் றாமோஸ் கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தவும் ஏ.சி மிலனின் அலெஸியோ றோமக்னோலி தனது உதையை கோல் கம்பத்துக்குள் செலுத்தவும் 5-4 என்ற ரீதியில் பெனால்டியில் வெற்றிபெற்ற ஏ.சி மிலன் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here