கண்டாவளை பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள். படங்கள் இணைப்பு

0
55

கண்டாவளை பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (22.03.2018) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கிளிநொச்சி தர்மபுரம் இலக்கம் ஒன்று பாடசாலையில் இருந்து நடைபவனியாக தர்மபுரம் கிழக்கு பொதுநோக்கு மண்டபம் வரை வந்தடைந்து அங்கு மகளிர் தின நிகழ்வுகளும் பெண்கள் தொடர்பான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்தின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி, சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் ஞானபண்டிதன், அரச உத்தியோகஸ்தர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், கிராமமட்ட பெண்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here