காலிறுதியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

0
139

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.

றொச்டேல் அணியுடன் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தமையைத் தொடர்ந்து, தமது மைதானத்தில் குறித்த போட்டி மீண்டும் இடம்பெற்ற நிலையில் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றே காலிறுதிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, பெர்ணான்டோ லொரென்டே மூன்று கோல்களையும் சண் ஹெயுங் மின் இரண்டு கோல்களையும் கைல் வோக்கர்-பீற்றர்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். றொச்டேல் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டீபன் ஹும்பிறீஸ் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here