கிளிநொச்சியில் சுயேச்சைக் குழுவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் உறுதியுரைத்து சத்தியபிரமாணம்

0
56

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் நேற்று(21-03-2018)  பொது மக்கள் முன்னிலையில் உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்களே இவ்வாறு உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

இவர்கள் தங்களது உறுதியுரையில்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினராகிய நான் உள்ளுராட்சி சபையின் மக்கள் பிரதிநிதியாக

 மக்களால் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைய மக்களுக்கு மதிப்பளித்துஇ உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் வெளிப்படையாகவும் மக்களின் தேவைகளையும் நலனையும் மக்கள் விருப்பத்தினையும் நிறைவேற்றிஇ சமூக வளர்ச்சியையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்குவற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவேன் எனவும் மக்களுக்கும் சமூக வளர்ச்சிக்கும் தேசத்தின் விடுதலைக்கு எதிரான முறையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் செயற்படமாட்டேன் எனவும் மக்களாகிய தங்களின் முன்னிலையில் உறுதியுரைத்துச் சத்தியம் செய்கிறேன்.  எனத்  தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகர் மு.சந்திரகுமார், பொது  அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here