கிளிநொச்சியில் பாரிய விபத்து! (வீடியோ இணைப்பு)

0
1157

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று  இரவு சுமார் பத்து முப்பது  மணியளவில்  தனியாருக்கு சொந்தமான சொகுசு  பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்  பேருந்தின்  சாரதி உட்ப்பட நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த விபத்து தொடர்பில்  தெரிய வருவதாவது
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு  நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று பரந்தன் சந்தியை கடக்க முற்ப்பட்ட போது முல்லை வீதியில் இருந்து திடீர் என டிப்பர் ரக வாகனம் ஒன்று யாழ் நோக்கி வீதிக்கு ஏறியமையால் பயணிகளின்  நலன் கருதி பேருந்து சாரதி வீதியின் மறுபுறத்திற்கு பேருந்தை செலுத்தி விபத்தை தவிர்க்க முற்ப்பட்ட போதும் வீதியின் மறு புறத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here