கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் 26 பேர் கைது!

0
1022

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல இருந்த 26 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல இருந்த 26 பேர் கிளிநொச்சி கனகபுரம் தனியார் வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனியார் வீட்டை முற்றுகையிட்டு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல இருந்த  ஒரு சிறுவன் அடங்கலாக 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசேட அதிரடிப்படையினரும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here