கிளிநொச்சி சிறுவர் பூங்கா  ஆபத்தான நிலையில்!

0
305
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர்  பூங்கா ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரேயொரு சிறுவர் பூங்காவாக டிப்போச் சந்திக்கருக்கில் அமைந்துளள சிறுவர்  பூங்கா காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற சிறுவர்களுக்குரிய விளையாட்டு பொருட்களில்  பல  உடைந்தும், உடைந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. இது  தொடர்பில் பூங்காவை  ஆளுகை செய்யும்  கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும்  அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்றும் ஆனால்  அங்கு செல்லும் சிறுவர்களுக்கும் அவர்களை அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கும்  கட்டணத்தை அறவிட்டு வருகின்றனர் எனவும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பூங்காவில் காணப்படுகின்ற ஊஞ்சல் மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் உடைந்து காணப்படுவதோடு, உக்கிய நிலையில் எவ்வேளையும் உடைந்து விழும்  நிலையில் காணப்படுகிறது. பல தடவைகள் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே சிறுவர்களின் பாதுகாப்பினை கருதி உடனடியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து பெறுவதற்கு கரைச்சி பிரதேச சபையின் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட போது பயனளிக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here