கிளிநொச்சி பகுதியில் வீசி எறிந்த கேரள கஞ்சாவும் வாகனமும் மீட்ப்பு!

0
847

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று பிற்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை சென்ற அவ் ஓர் இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்

அவர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதிகள் ஊடாக வேகமா பயணித்துள்ளனர் பின்னர் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் நுழைந்த குறித்த வாகனம் வாகனத்தில் இருந்து நான்கு பொதிகளை எறிந்து விட்டு குள எல்லைக்குள் சென்று அங்கு பாதை முடிவடைந்ததினால் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்

பின்னர் அவர்கள் வீசிய பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் ஒரு கிலோ அளவிலான நான்கு கேரள கஞ்சா பொதிகள் வீசப்பட்டிருந்தது

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here