கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலி

0
746

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று 08-01-2019 மாலை  பளை இயக்கச்சி  பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி  552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பி.ஜெயக்குமார் (வயது 36) பளை, கே. குகதாஸ் (வயது 32)  பளை மாசார், எஸ். ரதீஸ்வரன் (வயது 26) சுழிபுரம் வட்டுக்கோட்டை ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர்.   உயிரிழந்தவர்களின்  சடலங்கள் கிளிநொச்சி   மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை  பொலீஸார் கிளிநொச்சி தடயவியல் பொலீஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here