
கிளிநொச்சி சந்தையின் பழக்கடைக் தொகுதிக்கும் மரக்கறிக்கடை தொகுதிக்கும் இடையே உள்ள பகுதி மிகவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இது குறித்து கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. மாதாந்தம் 1240 ரூபா ஒவ்வொரு வர்த்தகர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர். ஆனால் அதற்குரிய சேவை இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த சந்தை வர்த்தகர்கள்
கழிவகற்றல் மற்றும் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்றால் சில நாட்களுக்கு தொடர்ந்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். மறுபடியும் பழைய நிலைக்கு சென்றுவிடுகின்றனர் நாங்களும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனிடம வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது இன்றைய தினம்( சனிக்கிழமை) குறித்த பகுதிக்கு கொங்றீட் இட்டு நிரந்தரமாக செப்பணிடவுள்ளதாக தெரிவித்தார்.