கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்

0
41

கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம்(02-04-2018) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இணைத்தலைவா்களான வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா் அங்கையன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்!

இதேவேளை குறித்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பராளுமன்ற உறுபபினா் மாவை சேனாதிராசா  வடமாகாண கல்வி அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோா்கள் கலந்துகொள்ளவில்லை.

கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னாள் கரைச்சி பிரதேச செயலாளாரும், கண்டாவளை பிரதேச செயலாளருமான கே.நகேஸ்வரனுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சா்கள், உறுப்பினா்கள், பிரதேச செயலாளா்கள், இராணுவ உயா் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here