சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்

0
118

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டி நீதிமன்றத்திற்கு அவதூறு செய்ததாகத் தெரிவித்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here