சமயங்கள் எவையும் மனித படுகொலையை போதிக்கவில்லை – கிளிநொச்சி சர்வமத குழு தெரிவிப்பு

0
15
இலங்கை ஒரு பல்லின சமூகம் வாழ்கின்ற நாடு எனவே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள்  பல்லின சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாதது . எந்த சமயங்களும் மனித படுகொலையை போதிக்கவில்லை என கிளிநொச்சி சர்வமதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி கருணா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் மதங்களுக்கு அப்பால் மனிதர்களாக ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம், வாழ்ந்து வருகின்றோம். எனவே இந்த சூழல் பாதிக்கப்படக் கூடாது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி  இடம்பெற்ற சம்பவங்களை  தொடர்ந்து கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அந்தக் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு  ஆறுதலை கொடுப்பது எங்களது பொறுப்பாகும்.
மேலும் பாதுகாப்பு கருதி சோதனை நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் ஆனால் மனித மான்பை பாதிக்கின்ற வகையில் சோதனைகள் இடம்பெறுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் ஒற்றுமைக்கு தடையாக  உள்ள  களைகளை அகற்ற  வேண்டும் எனவும் சர்வமத குழு தெரிவித்துள்ளது.
அடிமட்ட மக்கள் மத்தியில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஜக்கியம் நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here