சாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு! (படங்கள் இணைப்பு)

0
384

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் குமரிவேந்தன் தலைமையில் காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா அவர்களின் சாமி சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஆசியுரையை வணபிதா டாணியலும், வாழ்த்துரைகளை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனும், கவிஞர் சி. கருணாகரனும், ஆய்வுரையினை சாந்தபுரம் பாடசாலை அதிபர் பெ. கணேசனும், வெளியீட்டுரையை வணபிதா றொகானும் ஆற்றியிருந்தனர்.

நூலின் முதற்பிரதியை இயற்கையான முறையில் விவசாயத்தில் ஈடுப்படுகின்ற விவசாயி ஒருவர் வெளியிட்டு வைக்க அவ்வாறே விவசாய நடவடிக்கையில் ஈடுப்படும் பெண் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் இயற்கை முறையில் விவசாய நடவடிக்கையில் ஈடுப்படு்கின்ற பலர் கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here