சார்ப் மனிதநேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி

0
100
சார்ப் மனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி இன்று (09.01.2019) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.
அண்மையில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசிக்கும் சார்ப் நிறுவனத்தின் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீடும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கபட்டது.
இதனை இன்று (09.01.2019) சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் ஒன்றினைந்து குறித்த தற்காலிக வீட்டினை மீள் புனரமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த புனரமைப்பணியின் போது குறித்த நிறுவனத்தின் திட்டம் முகாமையாளர் மற்றும் களத்திட்ட முகாமையாளர்  உயர்நிலை அதிகாரிகள் கண்ணி வெடி அகற்;றும் பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.இதன்போது பல வீடுகள் வாழ்வாதாரங்கள் என பல சொத்தழிவுகள்  இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here