சிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு

0
112
சர்வதேச சிறுவர் தினம் கடந்த முதலாம் திகதியிலிருந்து தேசிய மட்டத்தில் பல மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் திருமலை மாவட்டத்திற்கான சிறுவர் தின நிகழ்வு
மூதூர் பிரதேச 64 ம் கட்டை கிராமத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் ஆலய முன்றலில் இந்து மதகுருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தலைமையில் இன்று 07 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது கடந்த வருடங்களில் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் ஏனைய மாணவர்களுக்கு சிறுவர் தின சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
இதன் போது மூதூர் பொலீஸ் பொறுப்பதிகாரி திருமலை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here