சிலாபத்தில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி!

0
133

சிலாபம் – வென்னப்புவ, நயினமடம பாலத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ நோக்கி பயணித்த லொறி மீது, பின்னால் பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தொன்றில் கலந்துகொண்டு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here