தண்ணிமுறிப்பு குளத்தில் நீர் இன்மையால் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு!

0
107

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் முற்றாக வற்றி காணப்படுவதால் குளத்தினை நம்பி நன்நீர் மீன்பிடி தொழில் செய்யும் முன்நூறிற்கு மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தண்ணிமுறிப்பு குளத்தில் இரண்டு மீன்பிடி சங்கங்கள் காணப்படுகின்றன  150 அங்கத்தவர்களை கொண்ட  தண்ணிமுறிப்பு மீனவர் சங்கமும் 154 அங்கத்தவர்கள் கொண்ட முஸ்லீம் மீனவ சங்கம் என்று இரண்டு சங்கங்கள் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் முற்றாக குறைந்துள்ளதால் குளத்தினை நம்பி வாழ்ந்த முன்நூறிற்கு மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துதாக தெரிவித்துள்ளார்கள்.

நாள்தோறும் நூறு கிலோவிற்கு மேற்பட்ட நன்னீர் மீன்கள் இந்த குளத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதாகும் தற்போது குளத்தில் நீர் இன்மையினால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here