தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

0
59

தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்றையதினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது தமது தந்தையை விடுதலை செய்து தருமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இதன் போது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அரசியல் கைதிஆனந்த சுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த நிலையில் அரசியல் கைதியை பொலிஸார் மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போதே அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோக்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here