துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

0
62

தங்காலை, வாடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) முற்பகல் 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகத்தினை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை – கதிர்காமம் பிரதான வீதியின் வாடிகல பகுதியில் உள்ள மோட்டார் வாகன நிலைமொன்றின் உரிமையாளரான 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here