தேசிய ரீதியில் சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு!

0
101

30 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சாதித்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19.11.201 அன்று மாலை 3.30 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் இளைஞர் விளையாட்டு விழாவின் இவ்வாண்டுக்கான 30 ஆவது 30 வது தேசிய இளைஞர் விளையாட்டு கடந்த மாதம் 25 ம் திகதிமுதல் 2௮ ம் திகதிரை மாத்தறை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

இந்த விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச சம்மேளனத்திற்கு உட்பட்ட பண்டாரவன்னியன் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த செல்வி சிவசோதிநாதன் விதுஷா 5000M ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் 1500 M ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்திருந்தார்

அத்தோடு 20 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்கள் பிரிவு அஞ்சலோட்ட குழு மூன்றாம் இடத்தை பெற்று முல்லைத்தீவு மாவட்டம் இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பிரகாசித்தது

இந்த போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களே கௌரவிக்கப்பட்டுள்ளனர் இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி யு புவனராசா முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையின் உடற்கல்வி ஆலோசகர் பி டி கே டிலான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி சறோயா குகநேசதாசன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர் ப பஞ்சலிங்கம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர்களை கௌரவித்தனர்

நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் யுவதிகலென பலரும் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here