நாசாவின் புதிய கண்டுபிடிப்பில் நீல நட்சத்திரம்!

0
121

விண்வெளி என்பது இன்னும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருந்து வருகிறது.எத்தனையோ ஆராய்ச்சிகள் அது குறித்து நடந்து கொண்டே இருந்தாலும்,ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நாம் வாழும் இந்த பேரண்டத்தை குறித்த பிரமிப்பை அதிகப்படுத்தி கொண்டே தான் செல்கிறது.

அப்படியான ஒரு புதிய கண்டுபிடிப்பு,கற்பனை கூடு கடினமாகி போகும் அளவிற்கு நிகழ்ந்துள்ளது.அது பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் தனியாக இருக்கும் நட்சத்திரம் ஒன்று நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதே.நாசா அனுப்பி இருக்கும் ”தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்” என்ற தொலைநோக்கிதான் இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது.

இக்காரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் சூரியனை விட பல மடங்கு பெரியது.இந்த பேரண்டத்தில் ஏறத்தாழ பாதியளவை கடந்து இந்த நட்சத்திரம் நீல நிறத்தில் ஒளிர்கிறது.இந்த நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்தடைய 9 பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.அதாவது இப்போதைய பூமி வெறும் 30 சதவீதம் உருவாகி இருந்த போதே இந்த ஒளி அந்த நட்சத்திரத்தை விட்டு புறப்பட்டுவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நாசா அனுப்பி இருக்கும் ”தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்” என்ற தொலைநோக்கிதான் இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது.இவ்வளவு தூரத்தில் ஒரு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை.இந்த நட்சத்திரம் பூமியை விட பெரிதாக இருந்தாலும் தனியாக இருக்கிறது. இதன் குடும்பத்தில் எந்த கோள்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here