பத்திரிகையாளராக மாறுகிறார் நடிகை சமந்தா..!

0
173

தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாக சைத்தாயாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் போன ஆண்டு அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து, பல படங்களில் ஒப்பந்தமாகி சமந்தா நடித்துவருகிறார் சமந்தா. இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ், மகாநதி, யு டர்ன் (தமிழ், தெலுங்கு ரீமேக்), சீமராஜா என பல படங்கள், இந்த வருடம் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கன்னட படமான யு டர்ன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு மற்றும் தமிழாக்கத்தில் தான் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பவண் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுக்கு கொலைகள் குறித்து துப்பறியும் பத்திரிகையாளராக சமந்தா நடிக்கிறார்.

மேலும், காவல்துறை அதிகாரியாக ஆதி, காதலராக ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, நடிகர் நரேனும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். விதியை மீறி யு டர்ன் எடுக்கும்போது உயிரை விடுகிறார் ஒரு நபர், அந்த கொலையின் மர்மம் குறித்த படம் தான் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here