பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் 

0
20

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு இன்று (29) மாலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் இவ்விஜயத்தில் ஆராயப்பட்டதுடன் ,துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கும் ஆளுநர் அவர்கள் விஜயம் செய்ததுடன் அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பருத்தித்துறை ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் ஆகியோருடனும்  கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை கடற்கரையில் அமைந்துள்ள நடராஜா திறந்தவெளி கலையரங்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் அப்பகுதி மக்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here