பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறதா? இன்று பகல் தீர்மானம்

0
6

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அத தெரண வினவியதற்கு, தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (11) பகல் கூடி இது தொடர்பில் பேசி தீர்மானம் எடுக்க உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எருபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததையடுத்து முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here