பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 2 நாள் பயணத்தில் வந்த நிலை!

0
117

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என ராகுல்காந்தி கூறியதாக குறிப்பிட்டு பேசினார். மேலும் இயற்கை வளங்கள் மீது முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை உண்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாகவும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தொடர்ச்சியாக மத ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து பிரிவினைவாதத்தினை விதைக்கிற ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு எதிராக மிக காட்டமான பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்.

“சுரண்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வரிசையில் கடைசியாக நிற்பவரோடு நானும் நிற்கிறேன். அவர்களின் மதமோ, சாதியோ, நம்பிக்கைகளோ எனக்கு முக்கியமில்லை.

நான் வலியில் உள்ளவர்களை சந்தித்து அவர்களை அரவணைத்துக் கொள்கிறேன். வெறுப்பு மற்றும் அச்சத்தை போக்க நினைக்கிறேன். எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேண். நானே காங்கிரஸ்” என பிரதமர் மோடிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here