பிரபாகரனின் பதுங்குகுழியை இராணுவத்தினருக்கு வழங்க உத்தேசம்

0
75

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தளத்தை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்றுக் காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பிலான கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்திருந்தார்.

இது தொடர்பிலேயே நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறை வளாகத்தை இராணுவத்தினருக்கு எழுத்து மூலம் நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என்ற யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here