பெரும்பான்மை கட்சிகள் தமிழ் பிரதேசங்களை ஆள முயற்சி

0
51

யுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான முழு பொறுப்பும் உள்ளுராட்சி சபைகளுக்கு காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் செயற்படக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக்       கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் நடைபெற்றது.

இதன் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள்   மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் உள்ளுராட்சி சபையின் புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியில் பல மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க தவறும் பட்சத்தல் பெரும்பான்மை சிங்கள கட்சிகள் தமிழ் பிரதேசங்களில் ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here