பொலிஸ் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம் 

0
355
கிளிநொச்சி உமையாள்புரம் ஏ 9 வீதியில் 16.12.2018 இன்று மாலை 7.00 மணியளவில் வீதியால் சென்ற நபரை யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு  சென்றுகொண்டிருந்த  பொலிஸ்வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது  வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளது.
இதன்போது தெரியவருவதாவது டிக்கோயாவை சேர்ந்த பழனிவேல் பாலசுப்பிரமணியம் என்ற  52 வயதுடைய நபரே விபத்துக்குள்ளானவர். இவர் வீதியில் மதுபோதையில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் எதிர்திசையில் வேகத்தில் வந்த பொலிஸ் ஜீப் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட  விசாரணையில்  தெரியவருகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here