மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்கள் பீட்டாவிடம்!

0
119

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் கார்பன் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையே முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கார்பன் பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினரால் இவை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகளான வி.நிரஞ்சன், ரனித்தா மயூரன் ஆகியோரும் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here