மாவட்டத்தில் முதலிடம்பெற்ற மாணவியை கௌரவித்த காந்தள் அமைப்பு

0
105

இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற  பழம்பாசி பாடசாலை  மாணவி இ துச்சாதனா மற்றும் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையை இழந்தும் பரீட்சையில் சித்திபெற்று சாதித்த முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான ஞானசீலன் ராகினி ஆகிய இருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்

குறித்த இரண்டு மாணவர்களும் இன்று காந்தள் அமைப்பின் புதுக்குடியிருப்பு கைவேலி  மருதநகர்  அலுவலகத்தில் அழைக்கப்பட்டு மதிய உணவு வழங்கி பாடசாலை உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபா நிதியுதவியும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்

அத்தோடு இரண்டு மாணவர்களுக்கும் கல்விக்காக மாதாந்தம் 1500 ரூபா வழங்குவதாக மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here