மாவட்ட செயலக விழாக்களுக்கு ஊடகவியலாளர்களை அழைக்காத முல்லைத்தீவு மாவட்ட செயலகம்!

0
75

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை புறக்கணித்து மாவட்ட செயலகம் நிகழ்வுகளை நடாத்திவருகிறது என தெரிவிக்கப்படுகிறது

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு கூட்டங்களுக்கு  ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதோ தகவல் வழங்குவதோ இல்லை என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த நிலை நீடிப்பதால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் அவர்களது கவனத்துக்கு கொண்டு சென்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாவட்ட தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்  பதவிக்குரியவர் நியமிக்கப்படாததால் நிகழ்வுகள் முக்கிய கலந்துரையாடல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கப்படுவதில்லை எனவும் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட செயலகம் செயற்ப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

குறிப்பாக மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் பங்குபற்றுதல் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்துடன் ஊடகவியலாளர்கள் தொடர்புகொள்ளல் உள்ளிட்ட பாரிய இடர்பாடு காணப்படுகிறது இதனை நிவர்த்தி செய்யுமாறு கோரப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here