முதல்வர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்!

0
207

உடல்நல குறைவின் காரணமாக கடந்த 28 ஆம் தேதி நள்ளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து 11 வது நாளாக மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தனர். வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்னம் தொண்டர்கள் நடந்துகொள்ள வேண்டுமெனவும் திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here