முல்லைதீவில் இளைஞர்கள் செய்த வேலை  பலரும் பாராட்டு

0
82

 இளைஞர்களது நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டில் பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் இளைஞர்கள் செய்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது

முல்லைத்தீவு முள்ளியவளை முதலாம் வட்டார இளைஞர்கள் கடந்த 6 ஆண்டுகளாக இழுப்பையடி இளைஞர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பல்வேறு முன்னுதாரணமான செயற்ப்பாடுகளில் ஈடுபடுகின்றனர்

அந்தவகையில் நேற்றுமுன்தினம்(5) வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் முள்ளியவளை முதலாம் வட்டார பகுதியில் சித்தியடைந்த 12 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை நேற்று(6) மாலை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர்

குறித்த முள்ளியவளை முதலாம் வட்டார இழுப்பையடி இளைஞர் சங்கம் இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த பகுதியில் சித்தியடைந்த பெ.மதீசன் (186 புள்ளிகள் ) பா.தேனுசா (182 புள்ளிகள் ) ஞா.ராகினி (169 புள்ளிகள் ) தி.திகழரசன் (180 புள்ளிகள் ) பி.கனிதா (167 புள்ளிகள் ) பி.ரிசோபன்(189 புள்ளிகள் ) ஜெ.விபுசாயினி (172 புள்ளிகள் ) இ.டினேஷ் (166 புள்ளிகள் ) அ.கவிப்பிரியன் (163 புள்ளிகள் ) ற.அஸ்வினி (186 புள்ளிகள் ) த.தாரகா (164 புள்ளிகள் ) எஸ்.தமிழரசி (168 புள்ளிகள் ) ஆகிய 1 2 மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு ஒன்றை நேற்று (6) மாலை 5 மணியளவில் முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள இலுப்பையடியில் சிறப்புற இடம்பெற்றது

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இந்த இளைஞர்களின் செயற்ப்பாடுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here