முல்லைத்தீவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடைத்தங்கல் முகாம்களுக்கு ஆளுநர் விஜயம்

0
136

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது

அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய  வடக்குமாகான ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்கள் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்

அந்தவகையில் காலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்திய ஆளுநர் அதனை தொடர்ந்து வெள்ள நிலைமைகள் தொடர்பிலும் பிரதேச சபைகளது சேவைகள் அவற்றுக்கான குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிய கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சென்று அங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினார்

அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு சென்ற ஆளுநர் அங்கு பிரதேச செயலக நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆறுதல் நிறுவனம் கொண்டுவந்த ஒருதொகுதி பொருட்களை பெற்று பிரதேச செயலகர் அவர்களிடம் கையளித்தார்

அதனை தொடர்ந்து வெள்ளம் காரணமாக்  இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள மன்னாகண்டல் கிராம அலுவலர் மண்டபம் மன்னாகண்டல் பொதுமண்டபம் மன்னாகண்டல் பாடசாலை சுதந்திரபுரம் பாடசாலை உள்ளிட்ட நிலையங்களுக்கு சென்று அவர்களது நிலைமைகள் அவர்களுக்கு உணவு வழங்கல் குடிநீர் வழங்கல் மலசல கூட வசதிகள் மருத்துவ சேவைகள் இடம்பெறுவது தொடர்பில் பார்வையிட்டதோடு அவர்களது குறிகள் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்

இந்த விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் ம பிரதீபன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்

இதனைவிட இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் முன்னாள்   பாரளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் அனந்தி சசிதரன் எம் கே சிவாஜிலிங்கம் ஆ புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் மக்கள் தங்கியுள்ள பல்வேறு நிலையங்களுக்கு சென்று நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here