முல்லைத்தீவில் 3 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த உயிரிழப்பு!

0
166

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கள்ளப்பாடு பகுதியில் நேற்று(10) மாலை சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்

நேற்று தந்தை மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த சமயம்  தாயார் கடைக்கு சென்றிருந்த வேளை தமயனுடன் வீட்டில் இருந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த வேளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவத்தில் 2015.03.17 அன்று பிறந்த 3 அகவையுடைய   ரஜிதன் ரதிசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்

சிறுவனது உடலம் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here