மூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்! (படங்கள் இணைப்பு)

0
2164

கிளிநொச்சி படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றது.

புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் கொட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டு இதன்போது புகைப்பட துறையில் மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து புலமை பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இன்நிகழ்வின் இறுதியில் தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறிதத் நிகழ்வில் கலந்து கொண்டடு கலைஞர்கள் கௌரவித்தமை குறிப்பிடத்தக்க விடயம்

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here