யாழில் நினைவேந்தலும் கவனயீர்ப்பு போராட்டமும்! (வீடியோ இணைப்பு)

0
182

திருகோணமலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் 13 ஆவது நினைவு நாளான இன்று அவரது படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்களால் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளருடன் தெற்கைச் சேர்ந்த பல்வேறு ஊடகவியலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முற்பகல் 10 மணியளவில் பிரதான வீதியில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது .11 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் அனைத்து ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here