வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று விஜயம்

0
118

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் கண்டாவளை மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச மக்களுடன் கலந்துரையாடியா அமைச்சர் மக்களிடம் கண்டாவளை மகா வித்தியாலயத்துக்கு நுலகத்திடற்கான கட்டிடத்தையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here