வெள்ள அனர்தத்தை ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜெயசூரிய கிளிநொச்சி விஜயம் 

0
202
சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று 03-01-2019 கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலகத்தில்  வெள்ளம் அனர்த்தம்  தொடர்பான நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீளவும் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கான காசேலைகளையும் வழங்கி வைத்த அவர்.  தேசிய சேமிப்பு வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, திணைக்களங்களின்  உயரதிகாரிகள். ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here