ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

0
65

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (08) முற்பகல் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

“போதைப்பொருளற்ற தேசம் – மகிழ்ச்சி நிறைந்த வீடு” என்ற கருப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பெண்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

விசேட திறமைகளை வெளிப்படுத்திய பெண்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மகளிர் பொலிஸ் பரிசோதகர் நிலுகா பெரேரா மற்றும் வானியல் துறையில் திறமைகளை வெளிப்படுத்திய தில்ருக்ஷி சந்தரேகா குமாரசிங்க உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, ஷியானி விஜேவிக்ரம, ஆரியவத்தி கலபத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியின் தலைவி பிரியங்கனி அபேவீர, செயலாளர் சந்திரிகா த சொய்சா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here