ஹர்த்தாலுக்கு செல்வம் எம்.பி பூரண ஆதரவு!

0
14

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனத் தெரிவித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த போராட்டத்துக்கும் ஹர்த்தால் அழைப்புக்கும் தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயபூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here